Saturday 2 March 2013

சுஜாதா -தொடர் பதிவு

 

வணக்கம் நண்பர்களே ,
                                             இந்த தொடர் பதிவு , எழுத்துலகில்  தனி இடத்தை பிடித்த திரு.சுஜாதா அவர்களைப்பற்றி,   இன்றும் அவரது  படைப்புகள்  புத்தக சந்தையில்  சக்கை போடு போடுகிறது என்றால் ,  இவரின்    எழுத்துக்கு மட்டுமே என்று சொன்னால் மிகை ஆகாது .அவரை பற்றி தெரிந்தவர்களுக்கு, இந்த பதிவு பழைய ஒன்றாக இருக்கும் . அனால் அவரை பற்றி தெரியாதவர்களுக்கு  மிக பயனுள்ள ஒன்றாக அமையும். எனது  அலுவலக நண்பர்  திரு. ரவிக்குமார் ஒரு நாள் எனது பதிவில் உள்ள  திரு. சுஜாதா  அவர்களின் படத்தை பார்த்து  இவர் யார் என கேட்டார் . அதன் தாக்கமே இந்த தொடர் பதிவு. 
   இந்த பதிவின் மூலம் இவரை பற்றி , யாரேனும் ஒருவர்  தெரிந்து  கொண்டாலும்  மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன். ஏனெனெனில், திரு சுஜாதாவின் கோடிகணக்கான  வாசகர்களில் ஒருவனான என் மூலம் அவரை பற்றி தெரிந்து கொண்டமைக்காக.

சுஜாதா ( எ ) ரங்கராஜன் . இவரை நீக்கிவிட்டு இலக்கிய உலகை படித்து விட முடியாது. இவர் கால் பதிக்காத  துறையே இல்லை எனலாம் அறிவியல்,தொழில்நுட்பம், கலை, திரைத்துறை , இலக்கியம், கம்ப்யூட்டர் இன்னும் பல.
 
இவர்  பிறந்தது சென்னை திருவல்லிகேணியில் , வளர்ந்தது திருச்சி அருகில் உள்ள ஸ்ரீரங்கம் .  அங்கேயே  உயர்நிலை பள்ளிப்படிப்பை  முடித்தார். பின்  திருச்சியில் செயின்ட் ஜோசப்  கல்லூரியில் இளங்கலை  முடித்தார். .(இவருடன் கல்லூரியில் படித்த இன்னொரு பிரபலம்  முன்னாள்  குடியரசு தலைவர் விஞ்ஞானி . திரு. அப்துல் கலாம் என்பது உபரி தகவல்).  சென்னை குரோம்பேட்டை MIT யில்   எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீரிங் படித்து முடித்தார்.



 இவர் பணியாற்றிய மதிய அரசு நிறுவனங்கள்

1.ஆல் இந்திய ரேடியோவில் பணியாற்றி உள்ளார்.

2. Aero Natical பிரிவில்  Air Traffic Controller ஆக சென்னை மீனம்பாக்கதில்  பணியாற்றி உள்ளார்.

3. Deputy Manager ஆக (BEL-Bharath Electronics Limited பெங்களூர் ) பணியாற்றி உள்ளார்(இன்று நாம் அனைவரும்  வாக்களிக்க பயன்படும்  Electronic Voting Machine இவர் தலைமையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாதனமாகும்)

சரி ! இவர் எப்படி எழுத்துலகுக்கு வந்தார் !!!


 இன்னும் பல  தகவலுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்  !!!!


நன்றியுடன்

இரா.மாடசாமி 

Read more: http://vaanavilmadasamy.blogspot.com/2012/07/blog-post_19.html#ixzz2MOOQah37

No comments:

Post a Comment

THANK YOU