Saturday 23 March 2013

தெரிந்து கொள்ளுங்கள்---அமெரிக்கா.


1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். [SCUBA--self Cointained Underwater Breathing Apparatus]


2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.


3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை,நீலம்,சிகப்பு


4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.


5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.


6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.


7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.


8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.


9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.


10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

No comments:

Post a Comment

THANK YOU